முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      இந்தியா
Ajith 2025-04-28

Source: provided

புதுடெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு, ஜனாதிபதி திரெளபதி முர்மு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தார்.

பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த சூழலில் 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவித்தது.

அதன்படி, தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதில் நடிகரும் கார் ரேசருமான அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்தது.மேலும் தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.

டெல்லியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொள்ள அஜித் குமார் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் டெல்லி சென்றிருந்தார். இந்த நிலையில், டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.நிகழ்வில், ஜனாதிபதி திரெளபதி முா்மு நடிகர் அஜித் குமாருக்கு பூத்ம பூஷண் விருதை வழங்கினார். விருதுபெற்ற புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் பெரிதாக வைரலாக்கி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து