Idhayam Matrimony

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திட்டமிட்டபடி 13-ந்தேதி தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      தமிழகம்
Jail 2024-10-04

கோவை, பொள்ளாச்சி பாலியல்  வழக்கில் திட்டமிட்டபடி 13-ந்தேதி தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியானதால், 2019ல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து விசாரித்தனர். சி.பி.சி.ஐ.டி., விசாரித்த வழக்கு, பின் சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.

இவ்வாறு பல கட்டங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு இறுதிவாதம் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு மே 13ல் அளிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நந்தினிதேவேியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. கரூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் பொள்ளாச்சி பாலியல் வழக்கின் இறுதி தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், நீதிபதி நந்தினிதேவியின் பணியிட மாற்றம் பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கில் திட்டமிட்டபடி 13-ந்தேதி தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிட மாற்ற நடவடிக்கைக்கு சிறிது காலம் ஆகும் என்பதால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி அந்த வழக்கில் தீர்ப்பை அறிவித்த பின்னரே கரூர் மாவட்ட நீதிமன்ற பணிக்கு செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து