எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு த.வெ.க. தலைவர் விஜய் கட்சியில் அடுத்தடுத்து அதிரடி அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி 5 மண்டலமாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கட்டமாக பல்வேறு இடங்களில் பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது. முதற்கட்டமாக கொங்கு மண்டலத்துக்குட்பட்ட 13 மாவட்டங்களுக்கான மாநாடு கடந்த 26, 27-ந்தேதிகளில் கோயம்புத்தூரில் நடந்தது. மாநாட்டுக்காக கோவை வந்த விஜய்க்கு வழி நெடுகிலும் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர்.
வரலாறு காணாத கூட்டத்தால் கோவை மாநகரமே குலுங்கும் அளவிற்கு விஜய் வருகை பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கோவை மாநாடு விஜய்க்கு மட்டுமின்றி தொண்டர்கள் மத்தியிலும் புது உற்சாகத்தை கொடுத்து உள்ளது.
இதை அடுத்து அடுத்த கட்டமாக மீதி உள்ள மண்டலங்களில் விரைவில் மாநாடு நடத்துவதற்கு விஜய் திட்டமிட்டு வருகிறார். இது பற்றி கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த்துடன் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. வரும் ஜூன் மாதத்துக்குள் மீதி உள்ள 4 மண்டல பூத் கமிட்டி மாநாட்டையும் நடத்தி முடிக்க விஜய் திட்டமிட்டு உள்ளார். மாநாடு முடிவடைந்ததும் த.வெ.க. தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்து மக்களை நேரடியாக சந்திக்க இருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க த.வெ.க. மகளிரணியினர் தமிழகம் முழுவதும் காலையிலும் மாலையிலும் வீடு வீடாக சென்று த.வெ.க. கொள்கைகளையும், மக்கள் பணிகளையும் மக்களிடையே கொண்டு சேர்த்து வருகின்றனர். இதுமட்டுமின்றி திராவிட கட்சிகள் மீது மக்களிடையே இருக்கும் எதிர்ப்புகளை த.வெ.க.வுக்கு சாதகமாக்கி கொள்ளும் நடவடிக்கைகளிலும் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


