Idhayam Matrimony

4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அங்கோலா அதிபர் இந்தியா வருகை

வியாழக்கிழமை, 1 மே 2025      உலகம்
jhovo-manual

Source: provided

அங்கோலா: அங்கோலா நாட்டு அதிபர் 4 நாள் பயணமாக இந்தியா வந்தார். இருநாடுகளுக்கும் இடையிலான ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு ஆப்பிரிக்காவிலுள்ள அங்கோலா நாட்டின் அதிபர் ஜான் மானுவல் கோன்கால்வ்ஸ் லாரன்கோ, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பை ஏற்று அரசு முறைப் பயணமாக நேற்று (மே.1) இந்தியா வந்தார். இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து இந்தப் பயணத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனக் கூறப்படும் நிலையில் அங்கோலா நாட்டின் முக்கிய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், தொழில் பிரதிநிதிகள் உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளுடன் அதிபர் லாரன்கோ இந்தியா வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மே.1 முதல் மே.4 வரையிலான இந்தப் பயணத்தின் மூலம் பாரம்பரிய மருத்துவம், விவசாயம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1985-ம் ஆண்டு முதல் இந்தியா, அங்கோலா நாட்டுடன் ராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளது. இதில், நிகழாண்டுடன் (2025) அந்த உறவுகள் 40 ஆண்டுகளை அடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து