Idhayam Matrimony

மெதுவாக பந்துவீச்சு: ஷ்ரேயாஸுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

வியாழக்கிழமை, 1 மே 2025      விளையாட்டு
1-Ram-50

Source: provided

சென்னை: மெதுவாக பந்துவீசியதால் சி.எஸ்.கே.வுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம்  விதிக்கப்பட்டதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. 

பஞ்சாப் த்ரில் வெற்றி... 

சென்னை சேப்பாக்கில் நடைபெற்ற போட்டியில் 19.4ஆவது ஓவரில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த சி.எஸ்.கே. 190க்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதாலும் சஹாலை 19ஆவது ஓவரில் கொடுத்ததும் திருப்பு முனையாக அமைந்தது. இதனால், இறுதியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. 

முதல்முறை... 

பஞ்சாப் அணிக்கு இது முதல்முறை என்பதால் ஐ.பி.எல். விதி 2.22இன் படி ரூ.12 லட்சம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை கேகேஆர் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது பஞ்சாப் அணிக்கும் கோப்பையை வென்று தருவார் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் விதைத்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து