எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: சொந்த மண்ணில் தற்போதுதான் சிறந்த ஆடுகளத்தைப் பெற்றுள்ளோம் என பஞ்சாப் உடனான தோல்விக்குப் பிறகு சி.எஸ்.கே. கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்தார்.
ஆடத்தை மாற்றியது...
சென்னை சேப்பாகில் நடந்த சி.எஸ்.கே.வுக்கு எதிரான போட்டியில் 19.4ஆவது ஓவரில் பஞ்சாப் த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சி.எஸ்.கே. அணியில் சாம் கரண் 88 ரன்கள் குவித்தார். பதிரான தவறவிட்ட கேட்ச், 17ஆவது ஓவரில் 20 ரன்கள் கொடுத்ததும் ஆடத்தை மாற்றியது.
போதுமானதாக இல்லை...
இந்தத் தோல்விக்குப் பிறகு தோனி பேசியதாவது: பேட்டிங் நன்றாக விளையாடினார்கள். முதல்முறையாக ஓரளவுக்கு நல்ல ரன்களை அடித்தோம். ஆனால், அது போதுமானதாக இல்லை. இன்னும் கூடுதலாக சில ரன்களை அடித்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. நாங்கள் கேட்ச்சுகளை சரியாக எடுக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. பிரீவிஸ், சாம் இடையேயான பார்ட்னர்ஷிப் நன்றாக இருந்தது. நாங்கள் கடைசி 4 பந்துகள் விளையாடவில்லை, கடைசிக்கு முந்தைய ஓவரில் 4 பேட்டர்கள் ஆட்டமிழந்தோம். இந்தமாதிரியான போட்டிகளில் அந்த 7 பந்துகள் மிக முக்கியானவை.
சாம் கரண் போராளி...
சாம் கரண் ஒரு போராளி. அது நம் அனைவருக்கும் தெரியும். அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பங்களிக்க நினைக்கிறார். அவருக்கு மெதுவான பிட்ச்களில் வாய்ப்பளித்ததால் அவருக்கு கடினமாகவே இருந்தது. சொந்த மண்ணில் தற்போதுதான் சிறந்த ஆடுகளத்தைப் பெற்றுள்ளோம். அதனால்தான் கூடுதலாக 15 ரன்கள் தேவை எனக் கூறுகிறேன்.
பிரீவிஸ் எங்களின் சொத்து...
பிரீவிஸ் மிடில் ஆர்டரில் நல்ல கணங்களை உருவாக்குகிறார். நல்ல பந்துகளை சிக்ஸர் அடிக்கும் ஆற்றல் அவரிடம் இருக்கிறது. பீல்டிங்கிலும் அவர் நல்ல ஆற்றலைக் கொண்டு வருகிறார். அவர் விளையாடும் விதம் எனக்குப் பிடித்துள்ளது. அவர் எங்கள் சொத்தாக மாறுவார் என நினைக்கிறேன் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


