எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக மாறிவிட்டதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.
பஞ்சாப் வெற்றி...
ஐ.பி.எல். தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே.வை வீழ்த்தியது.
ரிக்கி பாண்டிங் பாராட்டு...
சி.எஸ்.கே.வுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் முதிர்ச்சியான வீரராக மாறிவிட்டதாகவும், ஆட்டத்தின் சூழல்களை நன்றாக புரிந்துகொள்வதாகவும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
முதிர்ச்சியடைந்த வீரராக...
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷ்ரேயாஸ் ஐயரின் நம்பிக்கை முன்பை விட மிகவும் அதிகரித்துள்ளது. அவரது அனுபவமும் அதிகரித்துள்ளது. தற்போது அவர் மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக மாறியுள்ளார். இதற்கு முன்பு ஆட்டத்தின் சூழல்களை புரிந்துகொண்டதைக் காட்டிலும் தற்போது அவர் மிகவும் நன்றாக ஆட்டத்தின் சூழ்நிலைகளை புரிந்து கொள்கிறார். கடந்த ஆண்டு அவர் கேப்டனாக ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார். அந்த அனுபவம் அவருக்கு உதவியாக இருக்கும் என்றார்.
இரண்டாவது இடத்தில்...
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் 6 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


