முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து அரச குடும்பத்துடன் சமரசம் செய்ய இளவரசர் ஹாரி விருப்பம்

சனிக்கிழமை, 3 மே 2025      உலகம்
Kate-Middleton-2024-02-29

லண்டன், அரச குடும்பத்துடன் இணைய விரும்புவதாக இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து மன்னர் சார்லசின் இளைய மகன் இளவரசர் ஹாரி. தந்தை மற்றும் சகோதரர் வில்லியம் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹாரி தனது மனைவி, குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இதற்கிடையே இங்கிலாந்து கோர்ட்டில் நடந்து வந்த தனது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான வழக்கில் இளவரசர் ஹாரி தோல்வி அடைந்தார். அவரது மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.  கடந்த 2020-ம் ஆண்டு உள்துறை அமைச்சகம், ஹாரி இங்கிலாந்தில் இருக்கும்போது தானாகவே போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை என முடிவு செய்தது. இதை எதிர்த்துதான் ஹாரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில் அரச குடும்பத்துடன் இணைய விரும்புவதாக ஹாரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- எனது குடும்பத்தினருடன் சமரசம் செய்து கொள்ள விரும்புகிறேன். இனிமேல் தொடர்ந்து போராடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த போராட்டத்தை என் தந்தை இன்னும் எவ்வளவு காலம் வைத்திருப்பார் என்று எனக்குத் தெரியவில்லை.

எனது போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்வதற்கான இங்கிலாந்து அரசாங்கத்தின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டில் தோல்வியடைந்தது என்னை பேரழிவிற்கு ஆளாக்கியுள்ளது. இந்த பாதுகாப்பு விஷயங்களால் தந்தை சார்லஸ் என்னுடன் பேசமாட்டார். ஆனால் நான் இனி சண்டையிட விரும்பவில்லை. ஒரு புத்தகம் எழுதியதற்காக என் குடும்பத்தில் சிலர் என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். நிச்சயமாக, அவர்கள் பல விஷயங்களுக்கு என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஆனால் என் குடும்பத்துடன் சமரசம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து