Idhayam Matrimony

ஆஸி., தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி: அல்பனீஸ்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து

சனிக்கிழமை, 3 மே 2025      இந்தியா
mODI 2023-05-25

Source: provided

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. அந்தோணி அல்பனீஸ் மீண்டும் பிரதமர் ஆகிறார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு நேற்று  தேர்தல் நடந்தது. இதில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும். இந்த தேர்தலில் அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும், பீட்டர் டட்டன் தலைமையிலான லிபரல் நேஷனல் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில் பதிவான வாக்குகள் நேற்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஆஸ்திரேலிய பாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அந்தோணி அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆகிறார். அவர் 2வது முறையாக ஆஸ்திரேலிய பிரதம் ஆகிறார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமராக 2வது முறையாக தேர்வாகியுள்ள அந்தோணி அல்பனீசுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,  இந்த வெற்றி ஆஸ்திரேலிய மக்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இந்தோ-பசுபிக் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சியை கொண்டு செல்ல இந்தியா- ஆஸ்திரேலியா நட்பை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன்' என தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து