எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : ஐ.பி.எல். தொடரின் வளர்ச்சி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி பேசியுள்ளார்.
18-வது சீசன்...
ஐ.பி.எல். தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இதுவரை 17 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரின் அறிமுகம் குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி மனம் திறந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
எதிர்பாராத விஷயங்கள்...
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐ.பி.எல். தொடர் அறிமுகமான ஆண்டு மிகவும் உற்சாகமாக இருந்தது. நிறைய எதிர்பாராத விஷயங்கள் நடந்தன. அப்போது நாங்கள் அதிகம் டி20 போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
உணர்ச்சிகரமான தருணமாக...
ஐ.பி.எல். ஏலம் நடைபெற்றபோது, நாங்கள் மலேசியாவில் இருந்தோம். நாங்கள் முதல் தர கிரிக்கெட்டர்கள் வரிசையில் ரூ.20 லட்சத்துக்கான ஏலத்தில் இடம்பெற்றோம். எங்களுக்கு 20 லட்சம் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தோம். மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக அது இருந்தது. ஏனெனில், கோலாகலமான தொடக்க விழா, மிகப் பெரிய கிரிக்கெட் வீரர்களுடன் சந்திப்பு என மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தோம்.
நீண்ட பயணம்...
ஐ.பி.எல். பயணம் மிகவும் நீண்ட பயணமாக இருந்துள்ளது. நாங்கள் இளம் வீரர்களாக ஐ.பி.எல். தொடரில் இணைந்தோம். சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து விளையாடினோம். இளம் வீரர்களாக அறிமுகமான நாங்கள் அனுபவம் வாய்ந்த வீரர்களாக வளர்ந்தோம்.
நினைக்கவில்லை...
நேர்மையாக கூறவேண்டுமென்றால், ஐ.பி.எல். தொடர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்த அளவுக்கு ஐ.பி.எல். வளர்ச்சியடையும் என ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால், ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசனில் இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் உற்சாகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஐ.பி.எல். தொடருக்கான ஏற்பாடுகள், நடத்தப்படும் விதம், அணிகளுக்கு இடையேயான கடும் போட்டி இந்த தொடரை மிகவும் விரும்பத்தக்கதாக மாற்றியுள்ளது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


