Idhayam Matrimony

விசாரணை என்ற பெயரில் கொடுமை கூடாது: போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 4 மே 2025      தமிழகம்
chennai-high-court 2025-01-01

Source: provided

சென்னை :  விசாரணை என்ற பெயரில் யாரையும் போலீஸ் அதிகாரிகள் கொடுமை செய்யக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தன்னை எந்த வகையிலும் கொடுமை செய்யக்கூடாது என்று உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜி என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், மனுதாரருக்கு எதிரான புகார் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது என்று கூறப்பட்டது. மனுதாரர் தரப்பு வக்கீல் எம்.டி.அருணன், "விசாரணை என்ற பெயரில் மனுதாரரை போலீசார் துன்புறுத்துகின்றனர்" என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "ஒரு புகார் மீது விசாரணை நடத்த விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் இருந்தாலும், அது பி.என்.எஸ்.எஸ். சட்டத்துக்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும். அதேநேரம், விசாரணை என்ற பெயரில் நடைபெறும் கொடுமையை கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது.

எனவே, புகார் குறித்து விசாரணைக்கு அழைக்கப்படும் நபர் அல்லது சாட்சி சொல்ல வரும் நபர் என்று யாரை விசாரணைக்கு அழைத்தாலும், பி.என்.எஸ்.எஸ். பிரிவு 179-ன்படி போலீசார் சம்மன் அனுப்பவேண்டும். அவ்வாறு நடைபெறும் விசாரணை குறித்த விவரத்தை பொது டைரி, ஸ்டேஷன் டைரி, வழக்கு டைரி உள்ளிட்ட ஆவணங்களில் குறிப்பிட வேண்டும். விசாரணை என்ற பெயரில் யாரையும் போலீஸ் அதிகாரிகள் கொடுமை செய்யக்கூடாது" என்று உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து