எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அபுதாபி : இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், டெல் அவிவ் நகரில் தரையிறங்க தயாரான ஏர் இந்தியா விமானம் அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. ஜார்டான் வான் பரப்பில் இருந்து இஸ்ரேல் வான் பரப்பிற்குள் ஏர் இந்தியா விமானம் செல்லவிருந்தது.
அப்போது, டெல் அவிவ் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, டெல் அவிவ் நகரில் தரையிறங்க தயாரான ஏர் இந்தியா விமானம் உடனடியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர், விமானம் அபுதாபியில் பத்திரமாக தரையிறங்கியது. மேலும், டெல் அவிவ் , டெல்லி இடையேயான விமான சேவை நேற்று ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
அதேவேளை, இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணை விமான நிலையம் அருகே உள்ள சாலையில் விழுந்துள்ளது. இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பையும் மீறி இந்த ஏவுகணை சாலையில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 8 பேர் காயமடைந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


