எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, கூவாகம் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் மற்றும் சிறுமியின் பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், ஆவிகொளப்பாக்கம் குறுவட்டம், வடக்கு நெமிலி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் கண்மணி தம்பதியரின் மகள் செல்வி ஜெயலெட்சுமி (10) மற்றும் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் வட்டம், டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த விஜி மற்றும் சினேகா தம்பதியரின் மகன் செல்வன் நித்தேஷ் (5) ஆகிய இருவரும் சனிக்கிழமை மதியம் சுமார் 2.00 மணியளவில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, கூவாகம் கிராமத்தில் உள்ள கூவாகம் ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மற்றும் சிறுமியின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த இரு குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


