எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன் : பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் அமெரிக்க மேற்கொள்ளும் என்று அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "இந்தியா பல வழிகளில் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான கூட்டாளி என்று நான் கருதுகிறேன். இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிராக நிற்க வேண்டும். அந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் முடிந்த அனைத்தையும் செய்வோம். தீவிரவாதத்துக்கு எதிரான போரட்டத்துக்கு அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்குத் தேவையான ஆற்றல் மற்றும் வளங்களை வழங்கும்.
ட்ரம்ப் நிர்வாகம் இந்தியா அமெரிக்கா உறவின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது. அதேபோல், பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த முக்கியத்துவத்தையும் உணர்ந்துள்ளது. அந்த அச்சுறுத்தல் அதிகரிக்கும் போது அதற்கு எதிரான போராட்டத்துக்கு உதவ ட்ரம்ப் நிர்வாகம் அதில் அதிக கவனம் செலுத்தி அதற்காக அதிக வளங்களையும், நேரத்தையும் செலவழிக்கும் என்பது எனது நம்பிக்கை." இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலைக் கண்டித்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய மக்களுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு எங்களின் முழு ஆதரவும், அனுதாபங்களும் உண்டு" என்று தெரிவித்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


