எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நேற்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதில், மொத்தம் 95.03 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். அதன்படி மாணவிகள்: 96.70 சதவீதமும் , மாணவர்கள்: 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.56 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டங்களில் அரியலூர் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்ளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.00 மணியளவில் வெளியானது. மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விபரங்களை, 'ஆன்லைன்' வழியில் தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை, https://results.digilocker.gov.in மற்றும் www.tnreuslts.nic.in ஆகிய இணையதளங்களில், தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும், தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.06.2025 முதல் துணை தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
தேர்ச்சி விவரங்கள்:
1) தேர்ச்சி பெற்றவர்கள் : 7,53,142 (95.03சதவீதம்).
2) மாணவியர்- 4,05,472 (96.70 சதவீதம்).
3) மாணவர்கள் -3,47,670 (93.16 சதவீதம்).
4) தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 10,049.
5) பள்ளிகள் மேலாண்மை வாரியான தேர்ச்சி சதவிகிதம்.
6) அரசுப் பள்ளிகள் – 91.94 சதவீதம்.
7) அரசு உதவி பெறும் பள்ளிகள்- 95.71சதவீதம்.
8) தனியார் சுயநிதிப் பள்ளிகள்- 98.88சதவீதம்.
9) பள்ளிகள் வகைபாடு வாரியான தேர்ச்சி சதவிகிதம்.
10) இருபாலர் பள்ளிகள் – 95.30 சதவீதம்.
11) பெண்கள் பள்ளிகள் – 96.50 சதவீதம்.
12) ஆண்கள் பள்ளிகள் – 90.14 சதவீதம்.
முதல் 5 மாவட்டங்கள்:
1) அரியலூர் – 98.32 சதவீதம்.
2) ஈரோடு – 96.88 சதவீதம்.
3) திருப்பூர் – 95.64 சதவீதம்.
4) கன்னியாகுமரி – 95.06 சதவீதம்.
5) கடலூர் – 94.99 சதவீதம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


