எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நாடு தான் முதன்மையானது என்ற சி.எஸ்.கே.வின் பதிவு வைரலாகியுள்ளது
ஒத்திவைப்பு...
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் மூலமாக இந்தியா தனது பதிலடியைக் கொடுத்து வருகிறது. இதன் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு, மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. நேற்று முன்தினம் இரவு பஞ்சாப் -டில்லி போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
நாடு தான் முதன்மையானது....
இந்நிலையில் சி.எஸ்.கே. அணி எம்.எஸ்.தோனியின் வாசகத்தை பதிவாக வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில், “நாடுதான் முதன்மையானது. மற்ற விஷயங்கள் எல்லாம் காத்திருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்தப் பதிவில், “ஓவ்வொரு அடியிலும் தைரியம். ஒவ்வொரு துடிப்பிலும் பெருமை. நமது ராணுவத்துக்கு சல்யூட்!” எனவும் பதிவிட்டுள்ளது. இந்த வசனத்தை எம்.எஸ்.தோனி தனது குழந்தையைப் பார்க்கச் செல்லாமல் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடும்போது கூறியவை என்பது கவனிக்கத்தக்கது.
தகுதி இழந்தாலும்...
இந்த சீசனில் சுமாராக விளையாடிய சி.எஸ்.கே. பிளே ஆப் தகுதியை இழந்தாலும் கடைசி நேரத்தில் இளம் வீரர்களை களமிறக்கி சிறப்பாக விளையாடி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


