முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதற்றத்தை தணிக்க முயற்சிக்கவும்: பாக். ராணுவ தளபதிக்கு அமெரிக்கா அறிவுரை

சனிக்கிழமை, 10 மே 2025      உலகம்
India-Pakistan-War

வாஷிங்டன், போர்ப் பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை செய்யுமாறும், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் தொடங்க மத்தியஸ்தம் செய்யத் தயாரக இருப்பதாகவும் பாகிஸ்தான் ராணுவத் தளபதியிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று (சனிக்கிழமை) தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவர், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தைத் தணிக்க முயற்சிக்குமாறு வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருடன் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பேசினார். அப்போது, இந்தியா, பாகிஸ்தான் என இருதரப்பும் பதற்றத்தைத் தணிக்கும் வழிவகைகளை ஆராய வேண்டும் என்று மார்கோ ரூபியோ வலியுறுத்தினார். மோதல்கள் மேலும் வலுவடைவதைத் தவிர்க்கும் வகையில் இந்தியாவுடனான ஆக்கபூர்வ பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது. மேலும், அது எங்கள் வேலையும் அல்ல என அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியிருந்தார். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கத் தயார் என்று உறுதியளித்துள்ளார். இது முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து