Idhayam Matrimony

இந்தியாவுடனான மோதலில் 11 பாக்., வீரர்கள் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 13 மே 2025      உலகம்
Pak-Army 2023 05 13

Source: provided

இஸ்லாமாபாத் : மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் கடந்த 7ம் தேதி இந்திய விமானப்படை 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இவற்றில் 5 முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், 4 முகாம்கள் பாகிஸ்தானிலும் இருந்தவை. இந்த தாக்குதலில், பயங்கரவாத முகாம்களின் கட்டிடங்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலில், குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று ராணுவம் தெரிவித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே 4 நாட்கள் நடந்த ராணுவ மோதல் கடந்த 10-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த மோதலில், இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 5 பேர் வீர மரணமடைந்ததாகவும், பாகிஸ்தான் தரப்பில் 40-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தங்கள் ஆயுதப்படைகளுக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அதில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவுடனான மோதலில் 11 வீரர்கள் கொல்லப்பட்டனர், 78 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்ட 11 பேரில், 6 பேர் பாகிஸ்தான் ராணுவத்தையும், 5 பேர் பாகிஸ்தான் விமானப்படையையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து