முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை வெளியாகும் சூரியின் மாமன்

புதன்கிழமை, 14 மே 2025      சினிமா
Maman 2023 05 13

Source: provided

காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருப்பவர் நடிகர் சூரி. அவர் நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் நாளை வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். பிரசாந்த் பாண்டியராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

படம் பற்றி சூரி கூறும்போது, "எனக்கு யாருடனும் போட்டி கிடையாது. காமெடியன் என்ற ஒரு கட்டத்தை தாண்டி வந்துவிட்டேன். இனி மீண்டும் அந்த பாதைக்கு செல்வது கடினமாக இருக்கும். அப்படி நடித்தாலும்கூட, அந்த கதாபாத்திரம் வலிமையானதாகவும், 

என்னை மக்கள் மத்தியில் இன்னும் ஆழமாக கொண்டு செல்லும் கதாபாத்திரமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றார். இனி பத்தோடு பதினொன்றாக என்னால் இருக்க முடியாது. 'என்னை தேடி வந்து அழைக்கிறார்களே, கண்டிப்பாக அவர்களுக்கு ஒரு நல்ல சிறந்த படம் நடித்து கொடுத்துவிட வேண்டும் என்ற கோட்பாட்டுடன் இருக்கிறேன் என்றார். 

இந்த படத்தை என் குடும்பத்தார் பார்த்துவிட்டு அனைவரும் கண்கலங்கி விட்டனர். நான் இந்த படத்தைப் பார்த்து 5 முறை அழுதுவிட்டேன். 

உறவுகளில் விரிசல் இருந்த எவரேனும் படம் பார்க்க வந்தால், தங்கள் ஈகோவை விட்டு விட்டு உறவுகளோடு இப்படம் நிச்சயம் சேர்தது வைக்கும் என்றார். நன்றி மன்னிப்பு அன்பு என்ற வாழ்வியலின் அடிப்படையல் இந்த படம் உருவாகி இருக்கிறது என்று கூறிய சூரி அனைவரும் படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து