Idhayam Matrimony

சீனா - துருக்கி ஊடகத்தின் எக்ஸ் பக்கங்கள் முடக்கம் : மத்திய அரசு நடவடிக்கை

புதன்கிழமை, 14 மே 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : சீன அரசு ஊடகமான க்ளோபல் டைம்ஸின் எக்ஸ் கணக்கை இந்திய அரசு முடக்கியுள்ளது. அதேபோல், துருக்கியின் டிஆர்டி வோர்ல்ட்-ன் எக்ஸ் கணக்கும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. தவறான தகவல்களை வெளியிடுவதற்கு முன்பு உண்மைகளை சரிபார்த்து, ஆதாரங்களை மறுவிசாரணை செய்யுமாறு சீனாவை இந்தியா எச்சரித்திருந்த சில நாட்களுக்கு பின்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (மே 7 ) சீனாவில் உள்ள இந்திய தூதரகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “டியர் க்ளோபல் டைம்ஸ் ஊடகத்துக்கு, தவறாக வழிநடத்தும் செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு, உண்மைகளை சரிபார்த்து, உங்களின் ஆதாரங்களை குறுக்கு விசாரணை செய்து கொள்ளுங்கள் என்று நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.

பல பாகிஸ்தான் ஆதரவு தளங்கள், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய ஆதாரமற்ற தகவல்களை பரப்புகின்றன. ஊடக நிறுவனங்கள் இதுபோன்ற தகவல்களை சரிபார்க்காமல் பகிரும் போது அது ஊடக நிறுவனங்களின் பொறுப்பு மற்றும் ஊடக நெறிமுறைகளில் உள்ள குறைபாட்டினையே பிரதிபலிக்கும்.” என்று தெரிவித்திருந்தது.

முன்னதாக எக்ஸ் நிறுவனம் அதன் க்ளோபல் கவர்ண்மெண்ட் அஃபேர் கணக்கு மூலமாக, இந்தியாவின் அறிவுறுத்தலின்படி 8,000 எக்ஸ் கணக்குகளை இந்தியாவில் தடுத்து நிறுத்துவதாக மே 8-ம் தேதி தெரிவித்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து