Idhayam Matrimony

மெக்சிகோ சாலை விபத்தில் 21 பேர் பலி

வியாழக்கிழமை, 15 மே 2025      உலகம்
Accident-1

Source: provided

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய மெக்சிகோவின் பூப்லா - ஒக்ஸாகா தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அதே சாலையின் எதிரே சிமெண்ட் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. லாரியானது மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிர்பாராத விதாம எதிரே வந்த பஸ் மீது மோதியது. இதனையடுத்து மற்றொரு வேன் மீதும் நேருக்கு நேர் மோதியது. இந்த மோதல்களுக்குப் பிறகு லாரி ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் அதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில் மெக்சிகோவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து