முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸாவில் 2 நாட்களில் மட்டும் 300 பேர் பலி

சனிக்கிழமை, 17 மே 2025      உலகம்
Gaza 2024-04-15

Source: provided

காஸா : காஸாவில் ஹமாஸ் படையினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மத்திய கிழக்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்குள் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் ஊடுருவி அங்குள்ள சுமார் 250 மக்களை பிணைக்கைதிகளாக ஹமாஸ் படையினர் காஸாவுக்கு பிடித்துச் சென்றதுடன், அவர்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலில் கொல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காஸாவில் பல்வேறு கட்டமாக தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. 

இதனிடையே, காஸாவில் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளதன் வெளிப்பாடாய், கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்களில் காஸாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ கடந்து விட்டதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. மொத்த உயிரிழப்பு 53,000த்தை கடந்துள்ளது என்று காஸா சுகாதாரத் துறை தரப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து