முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இது காவி நாடல்ல; திராவிட நாடு: தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டம்

சனிக்கிழமை, 17 மே 2025      தமிழகம்
CM-1-2025-05-17

சென்னை, இது காவி நாடல்ல; திராவிட நாடு என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இடஒதுக்கீடு, பன்முகத்தன்மையை சீர்கெடுக்கும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மாநில பட்டியலுக்கு...

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மத யானை நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பின்பு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இது காவி நாடல்ல; திராவிட நாடு, இடஒதுக்கீடு, பன்முகத்தன்மையை சீர்கெடுக்கும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. மாநிலப்பட்டியலுக்கு கல்வியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

வீழ்த்த வேண்டும்... 

பின்னர் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- எல்லாவற்றிலும் சாதக பாதகம் இருக்கும். ஆனால், புதிய கல்விக் கொள்கையில் பாதகம் மட்டுமே உள்ளது. கல்விக் கொள்கைக்கு மதம் பிடித்தால் நாடு, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும். புதிய கல்விக் கொள்கை எனும் மதயானையை வீழ்த்த வேண்டும். கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.

சீரழிக்கும் திட்டம்.... 

மத்திய அரசின் குலக்கல்வி திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. யாரெல்லாம் படிக்கக்கூடாது என்று கூறுவதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். தேசிய கல்விக்கொள்கை நமது மாணவர்களின் படிப்பை சீரழிக்கும் திட்டம். எத்தனையோ சூழ்ச்சிகளை எதிர்த்துப் போராடி தமிழ்நாடு வென்றுள்ளது. அந்த வரிசையில் புதிய கல்விக் கொள்கையையும் எதிர்த்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து