முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அ.தி.மு.க. மாலை: இ.பி.எஸ். அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      தமிழகம்
EPS 2023 03 27

சென்னை, பெரும்பிடுகு முத்தரையரின் 1350 வது சதய விழாவையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350-ஆவதுசதய விழாவை முன்னிட்டு, அதிமுக சார்பில், 23ம்தேதி வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்திருஉருவச் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி இந்நாள் முன்னாள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின்முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கட்சி உடன்பிறப்புகளும், பொதுமக்களும்பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டசெயலாளர்  ப. குமார்,திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமானசீ னிவாசன் ஆகியோர் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து