எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காசா, காசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் 14 ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் செல்லும் அனைத்து உதவிப்பொருட்களையும் இஸ்ரேல் நிறுத்திவைத்தது. உணவைக் கொண்டு செல்வதில் நாங்கள் அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொள்கிறோம். போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் மனிதாபிமான நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் கூடுதல் அவசர உதவி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், கிட்டத்தட்ட 14,000 குழந்தைகள் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் கனடா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நட்பு நாடுகளின் அழுத்தத்தின் கீழ், குறைந்த அளவிலான உதவிப்பொருட்களை காசாவுக்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதித்தது. இந்நிலையில் ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் பேசுகையில், திங்களன்று ஐந்து லாரிகள் நிறைய மனிதாபிமான உதவிகள் மட்டுமே காசாவிற்குள் நுழைந்தன, அதில் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களும் அடங்கும். இஸ்ரேலிய முற்றுகையின் பல வாரங்களுக்குப் பிறகு, இந்த உதவி கடலில் ஒரு துளி போன்றது. இந்த சிறிய அளவிலான உதவி கூட இன்னும் தேவைப்படுபவர்களை சென்றடையவில்லை. நாங்கள் அவர்களை அடையவில்லை என்றால், அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறந்துவிடுவார்கள் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


