முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை : பிரதமர் நரேந்திர மோடி தகவல்

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      இந்தியா
Modi

Source: provided

புதுடெல்லி : ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். 

உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வு ஜெனிவாவில் நடைபெற்றது. இதில், காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது:- உலக சுகாதாரத்தின் தொலைநோக்கு பார்வையை இந்தியா வலுவாக எதிரொலிக்கிறது. உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்துகிறோம். இது 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சையை வழங்குகிறது. ஆயிரக்கணக்கான சுகாதார கட்டமைப்புகள் இந்தியாவில் உள்ளன.  எங்களுடைய கட்டணமில்லா தொலை மருத்துவச் சேவை 34 கோடிக்கும் அதிகமான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

இந்தியாவின் அணுகுமுறை அளவிடக்கூடிய மற்றும் நிலையான மாதிரிகளை வழங்குகிறது. எங்கள் கற்றல்களையும் சிறந்த நடைமுறைகளையும் உலகத்துடன், குறிப்பாக உலகளாவிய தென்பகுதி நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். உலகிற்கு யோகாவை வழங்கிய நாட்டிலிருந்து, அனைத்து நாடுகளையும் பங்கேற்க அழைக்கிறேன். வேதங்களிலிருந்து ஒரு பிரார்த்தனையுடன் நான் முடிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து