எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்காசி, குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. கர்நாடகாவின் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக அங்கு பெரும்பாலான இடங்களில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


