எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவள்ளூர்: தெலுங்கு - கங்கை கால்வாய் மதகு சீரமைப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த கிருஷ்ணா நதி நீர், மீண்டும் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டு புதன்கிழமை இரவு பூண்டி ஏரியை வந்தடைந்தது.
தெலுங்கு- கங்கை திட்டத்தின் கீழ், சென்னையின் குடிநீர் தேவைக்காக ஜனவரி முதல் ஏப்ரல் வரை வழங்கவேண்டிய கிருஷ்ணா நதி நீரை வழங்கவேண்டும் எனக்கோரி, தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதத்தில் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, சென்னை குடிநீருக்காக ஆந்திர மாநிலம் - கண்டலேறு அணையில் இருந்து, தெலுங்கு - கங்கை திட்ட கால்வாய் மூலம் கிருஷ்ணா நதி நீரை கடந்த மார்ச் 24-ம் தேதி ஆந்திர நீர்வளத்துறையினர் திறந்தனர்.
இந்நிலையில், கிருஷ்ணா நதி நீர் திறப்பை, தெலுங்கு - கங்கை கால்வாயில், ஆந்திர மாநிலம் - ஸ்ரீகாளஹஸ்தியில் மதகு சீரமைப்பு பணி மேற்கொள்வதற்காக ஏப்.19-ம் தேதி ஆந்திர நீர்வளத்துறையினர் நிறுத்தினர். இதனால், கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லைக்கு வருவது ஏப்.24-ம் தேதி, முற்றிலுமாக நின்றது. இச்சூழலில், தெலுங்கு-கங்கை கால்வாய் மதகு சீரமைப்பு பணி முடிவடைந்ததையடுத்து, மே 5-ம் தேதி மீண்டும் சென்னை குடிநீருக்காக கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர நீர்வளத்துறையினர் , திறந்தனர்.
தொடக்கத்தில் விநாடிக்கு 500 கன அடி என, திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 19-ம் தேதி விநாடிக்கு 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர், 4 அல்லது 5 நாட்களில் தமிழக எல்லையான தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வரவேண்டிய நிலையில், 10 நாட்கள் தாமதமாக புதன்கிழமை காலை 7 மணிக்கு வந்தடைந்தது. அவ்வாறு வந்த கிருஷ்ணா நதி நீர், 25 கி.மீ., தூரம் பயணித்து, நேற்று (மே 21) இரவு பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. கிருஷ்ணா நதி நீர் வியாழக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 115 கன அடி என, பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


