Idhayam Matrimony

ஐ.பி.எல்.லில் எதிரணியை 40 முறை ஆல் அவுட்: மும்பை அணி புதிய சாதனை

வியாழக்கிழமை, 22 மே 2025      இந்தியா
Mumbai 2024-04-06

Source: provided

மும்பை: ஐ.பி.எல். வரலாற்றில் யாரும் தொட முடியாத சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது.

181 ரன்கள் குவிப்பு...

ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

பிளே ஆப் சுற்றுக்கு...

மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது. 

தொட முடியாத சாதனை...

இந்த போட்டியில் எதிரணியை ஆல் அவுட் செய்ததன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் யாரும் தொட முடியாத சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது. அதன்படி எதிரணியை 40 முறை ஆல் அவுட் செய்து மும்பை இந்தியன்ஸ் முதல் இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் ஆர்.சி.பி. அணி (26 முறை) உள்ளது. 3 முதல் 5 இடங்கள் முறையே கொல்கத்தா (25), சென்னை (24), பஞ்சாப் (19) ஆகிய அணிகள் உள்ளனர். அடுத்த 5 இடங்கள் முறையே ஐதராபாத் (19 முறை), டெல்லி (18), ராஜஸ்தான் (17), குஜராத் (5), லக்னோ (4) ஆகிய அணிகள் உள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த சாதனையை முறியடிப்பது மிகவும் கஷ்டமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து