எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் விவரங்களை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
இறுதிப்போட்டி...
2023-25 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டி அடுத்த மாதம் 11-15 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக பலர் கூறிவருகின்றனர். அதேவேளையில், இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல தென் ஆப்பிரிக்கா முயற்சிக்கும். இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடுவர்களாக செயல்பட உள்ளவர்களின் விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது.
ஜவகல் ஸ்ரீநாத்...
அதன்படி, கள நடுவர்களாக நியூசிலாந்தின் கிறிஸ் கேப்னி மற்றும் இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் செயல்படுவார்கள் எனவும், 3வது நடுவராக இங்கிலாந்தின் ரிச்சர்ட் கெட்டில் பரோவும், 4வது நடுவராக இந்தியாவின் நிதின் மேனனும் செயல்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், போட்டி நடுவராக (ரெப்ரீ) இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத் மேற்பார்வையிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.30.78 கோடி பரிசு...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.30.78 கோடியும், இறுதிப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு ரூ.18.46 கோடியும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


