முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி ஆயோக் கூட்டத்தில் கல்விநிதி, மீனவர்கள் விவகாரம் குறித்து பட்டியலிட்டு பேசினேன்: டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சனிக்கிழமை, 24 மே 2025      இந்தியா
CM 2024-12-21

புதுடெல்லி, நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்திற்கான கல்விநிதி, மீனவர்கள் விவகாரம் குறித்து பட்டியலிட்டு பேசினேன்  என்று டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் அரசியல் ரீதியாக வரும் சோதனைகளை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்  டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் நேற்று காலை தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டம் நிறைவடைந்ததும் முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு என்ன தேவை என்பதை பட்டியலிட்டு பேசினேன். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரிக்கை வைத்தோம். கோவை, மதுரையில் மெட்ரோ திட்டங்கள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழகத்திற்கான ரூபாய் 2,200 கோடி கல்விநிதி கிடைக்கும் என நம்புகிறேன். கல்விநிதி கிடைக்கும் என நம்பிக்கையோடு இருப்போம்.இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினோம். செங்கல்பட்டு - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழிச்சாலையாக்க கோரிக்கை விடுத்தோம். 

டாஸ்மாக் சோதனை விவகாரத்தில் தலைமை நீதிபதி தெரிவித்த கருத்து நியாயமானதுதான். அமலாக்கத்துறை நடவடிக்கை அரசியல் ரீதியானது. அரசியல் ரீதியாக வரும் சோதனைகளை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திப்போம். டாஸ்மாக், குவாரியில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை கூறுவது பொய். சோனியா காந்தி உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது; அரசியலும் பேசப்பட்டது. என்னிடம் வெள்ளை கொடியும் இல்லை; எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள காவி கொடியும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து