எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொச்சி : கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடல் அருகே மூழ்கி விபத்துக்குள்ளானது.
கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கப்பலில் லைபீரியா நாட்டின் கொடி இருந்ததாகக் கூறுகின்றனர். இந்தக் கப்பல் நேற்றிரவு 10 மணிக்கு கொச்சி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கொச்சியை தொடர்ந்து, தூத்துக்குடிக்கும் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த விபத்தின்போது, கப்பலில் 24 பேர் இருந்ததாகவும், அவர்களில் 9 பேர் பாதுகாப்பு உடைகளின் மூலம் தப்பித்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது. மீதமுள்ளவர்களை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக, கடலில் ஏற்பட்ட பாதகமான நிலைமையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி, கப்பலில் இருந்த கன்டெய்னர்களில் 367 மெட்ரிக் டன் அளவில் கந்தக எரிபொருள் இருந்ததாகக் கூறுகின்றனர். ஆகையால், அவை கரை ஒதுங்கும் சமயத்தில், அதனருகே மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை எச்சரித்துள்ளது. மேலும், கடற்கரையில் அடையாளம் தெரியாத எந்தப் பொருளையும் அணுக வேண்டாம் என்றும், 112 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


