Idhayam Matrimony

4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூன் 19-ல் இடைத்தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025      இந்தியா
Election-Commision 2023-04-20

Source: provided

புதுடெல்லி : கேரளா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் 2 சட்டப்பேரவைத் தொகுதிகள், கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒரு பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. வாக்குகள் ஜூன் 23ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில், காடி தொகுதியின் சட்டபேரவை உறுப்பினர், கார்சந்த்பாய் பஞ்சாபாய் சோலங்கி மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதி காலியாக உள்ளது. மற்றொரு தொகுதியான விஸ்வதாரின் எம்.எல்.ஏ. பயானி பூபேந்திர கந்துபாய், தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அத்தொகுதியும் காலியாக உள்ளது.

கேரளாவின் நிலாம்பூர் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. பி.வி. அன்வர் ராஜினாமா செய்ததாலும், பஞ்சாப் மாநிலத்தின் லூதியான தொகுதி எம்.எல்.ஏ. குர்பிரீத் பஸ்ஸி கோகி மற்றும் மேற்குவங்கத்தின் காளிகஞ்ச் எம்.எல்.ஏ. நசிருத்தீன் அஹமது ஆகியோர் உயிரிழந்ததாலும் மேற்சொன்ன மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளும் இடைத்தேர்தலைச் சந்திக்க இருக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து