முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.ஓ.சி. நடைமுறை விவகாரம்: வங்கிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : ‘வாங்கிய கடனை முழுமையாக திருப்பி செலுத்திய பிறகும், வேறொருவர் வாங்கிய கடனுக்கு ஜாமீன் உத்தரவாதம் அளித்திருந்தால் நிலுவை இல்லை என்பதற்கான சான்று (என்.ஓ.சி.) அளிக்க மறுக்கக்கூடாது’ என வங்கி நிர்வாகங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலாஜி என்பவர் தனியார் வங்கி ஒன்றில் தனது டேங்கர் லாரிக்காக கடன் பெற்றிருந்தார். வாங்கிய கடன் தொகையை வட்டியும், முதலுமாக முறையாக திருப்பி செலுத்திய நிலையில், அதற்கான நிலுவை இல்லை என்பதற்கான சான்று (என்.ஓ.சி.) வழங்கும்படி வங்கி நிர்வாகத்திடம் கோரினார். ஆனால் அதே வங்கியில் லீலாவதி என்பவர் வாகனத்துக்காக வாங்கிய கடன் தொகைக்கு பாலாஜி, ஜாமீன் உத்தரவாதம் அளித்துள்ள தைக் காரணம் காட்டி, அவருக்கு என்.ஓ.சி. வழங்க முடியாது என வங்கி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் தனது வாகனத்துக்காக வாங்கிய கடனை வட்டியும், முதலுமாக முழுமையாக திருப்பி செலுத்திய பிறகும், வேறொருவர் வாங்கிய கடனுக்கு அவர் ஜாமீன் உத்தரவாதம் அளித்திருந்தார் என்பதற்காக அவருக்கு நிலுவையில்லா சான்று (என்.ஓ.சி.) அளிக்க முடியாது என வங்கி நிர்வாகம் மறுப்பது ஏற்புடையதல்ல.  

பொதுவாக ஒருவர் வாங்கும் கடனுக்கு மற்றொருவர் ஜாமீன் உத்தரவாதம் அளி்த்தார் என்றால், கடன் பெற்ற நபர் தவணையை முறையாக திருப்பி செலுத்த தவறும்பட்சத்தில் தான் உத்தரவாதம் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே நேரம் உத்தரவாதம் அளித்த நபர், தான் பெற்ற கடன் தொகையை முழுமையாக அடைத்துவி்ட்டால், அந்தக் கடனுக்குரிய நிலுவை இல்லை என்பதற்கான சான்றிதழை வழங்க முடியாது என வங்கி நிர்வாகங்கள் சட்ட ரீதியாக மறுக்க முடியாது. இவ்வாறு உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து