Idhayam Matrimony

கொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பினார்: ரஷ்ய அதிபர் சென்ற ஹெலிகாப்டரை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல்

திங்கட்கிழமை, 26 மே 2025      உலகம்
drone 2024-04-29

Source: provided

கீவ் : ரஷ்யா அதிபர்  சென்றஹெலிகாப்டரை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடைபெற்றது. இதில் புதின் உயிர் தப்பினார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சென்ற ஹெலிகாப்டரை குறிவைத்து உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. இருப்பினும், புதின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவுக்குப் பிறகு புதின் பதற்றமான எல்லைப் பகுதியான குர்ஸ்க்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் மாதம் ரஷ்யா உக்ரேனியப் படைகளை குர்ஸ்க் பகுதியிலிருந்து விரட்டியடித்ததாக அறிவித்த பிறகு, புதின் குர்ஸ்க் பகுதிக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். புதினின் ஹெலிகாப்டர் பாதையில் உக்ரைனால் ஏவப்பட்ட ஒரு ஆளில்லா விமானம், ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிபர் ஹெலிகாப்ட்டர் தொடரணி வானில் பறந்து கொண்டிருக்கும்போதே அதைத் தாக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து