Idhayam Matrimony

தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

திங்கட்கிழமை, 26 மே 2025      தமிழகம்
power

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் காற்றாலை அதிகரித்த காரணத்தால் மின் உற்பத்தி உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் காற்றாலை மூலமாக 3,253 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. 

தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்துள்ளதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் காற்றாலை மின் உற்பத்தி 3,253 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் தமிழ்நாட்டின் அதிகபட்ச மின்தேவை 13,905 மெகா வாட்டாக இருந்தது. இதனால் கோடையில் மின் பற்றாக்குறை ஏற்படாது என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் கோடை கால மின் தேவை அதிகரிக்கவில்லை என்றும் காற்றாலை மின் உற்பத்தி முன்கூட்டியே தொடங்கியிருப்பதால் மின் பற்றாக்குறை ஏற்படாது என்றும் அமைச்சர் சிவசங்கர் சில நாள்களுக்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து