Idhayam Matrimony

த.வெ.க. பெண் நிர்வாகி மீது தாக்குதல்: தலைவர் விஜய் கடும் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 27 மே 2025      அரசியல்
Vijay 2025-03-28

சென்னை, வியாசர்பாடி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சென்ற த.வெ.க. நிர்வாகியை தாக்கியது கண்டிக்கத்தக்கது என்று விஜய் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில்  ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன.  தீவிபத்தில் குடிசைகளை இழந்த  மக்கள், தற்காலிகமாக அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள்  உடை, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் உணவும் வழங்கியுள்ளனர்.  

இதனைப் பார்த்த காவல் துறையினர், த.வெ.க. நிர்வாகிகளைத் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டியுள்ளனர்.  காவல் துறையினரை நோக்கிக் கேள்வி எழுப்பிய மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கங்காவதியை கீழே தள்ளியுள்ளனர். மேலும், இதைத் தடுக்கச் சென்ற  மகளிரணியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியை காவல் துறையினர் பிடித்து இழுத்துத் தள்ளி விட்டுள்ளனர்.  

தீவிபத்தில் பாதிக்கப்பட்டு,  தங்களின் அத்தியாவசிய உடைமைகளை இழந்து, நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு உதவுவது என்பது  மாபெரும் குற்றச் செயலா?  தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல. காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி, அப்பாவிகள் மீது மிருகப் பலத்தைக் காட்டி, மக்களிடம் வெறுப்புகளைக் குவித்து வருகிறது.   இதே போன்று மகளிருக்கு எதிரான அராஜக நிலை தொடர்ந்தால், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மிகப் பெரிய மக்கள் போராட்டத்தையும் சட்டப்போராட்டத்தையும் முன்னெடுக்கத் தயங்க மாட்டோம் என்பதைத் தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து