Idhayam Matrimony

இன்றுடன் முடிவடைகிறது 'கத்தரி வெயில்'

செவ்வாய்க்கிழமை, 27 மே 2025      தமிழகம்
Son-2024-05-30

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் (28-ந் தேதி) முடிவடைகிறது. 

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மார்ச் மாதம் முதலே கோடை காலம் தொடங்கிவிடுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் மார்ச் மாதம் முதல் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது. இதற்கு மத்தியில், இம்மாதம் (மே) 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்தரி வெயில் தொடங்கியது. ஏற்கனவே, வெயில் பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அக்னி நட்சத்திர காலத்தில் அது மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்பட்டது.

ஆனால், இயற்கை எண்ண நினைத்ததோ தெரியவில்லை, கிழக்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின்போக்கு மாறியது. இதனால், தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கியது. ஒரு புறம் வெயில், மறுபுறம் மழை என்று வித்தியாசமான வானிலை சூழல் நிலவியது. இதனால், அக்னி நட்சத்திர காலத்தில் அனுபவிக்க வேண்டிய வெப்பத்தின் தன்மை குறைந்து குளிர் காற்று வீசத் தொடங்கியது. மேலும், ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழையும் ஒரு வாரத்திற்கு முன்னதாக தொடங்கியதால், வெயிலின் அளவு வெகுவாக குறைந்தது. 

இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் இன்றுடன் (28-ந் தேதி) முடிவடைகிறது. மொத்தத்தில் அக்னி நட்சத்திரம் காலமான 25 நாட்களும் வெயில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம். தற்போது, தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், வெயில் படிப்படியாக குறைய வாய்ப்பு இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து