எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இம்பால், மணிப்பூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மணிப்பூரில் நேற்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.54 மணியளவில் (இந்திய நேரப்படி) நேற்று ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.46 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.70 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
இதனையடுத்து இரண்டாவது முறையாக காலை 2.26 மணியளவில் ரிக்டரில் 2.5 அளவிலும், மூன்றாவது முறையாக காலை 10.23 மணியளவில் ரிக்டரில் 3.9 அளவிலும் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மணிப்பூரின் சூரசந்த்பூர் பகுதியில் இருமுறையும், நோனி பகுதியில் ஒரு முறையும் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


