Idhayam Matrimony

மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஆலோசனை

வியாழக்கிழமை, 29 மே 2025      தமிழகம்
EPS-2025-05-29

சென்னை, மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். இன்றும் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. 

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளதையடுத்து கட்சிப் பணிகள், தேர்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பலரும் போட்டி போடுவதாகக் கூறப்படும் நிலையில், அதுதொடர்பாகவும் ஆலோசிக்கப்படடதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் இருந்த தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்ததாகக் கூறப்படும் நிலையில், தே.மு.தி.க.வுக்கு சீட் ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் வருகிற ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அ.தி.மு.க.வுக்கு 2 இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து