எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாட்னா, பயங்கரவாதம் பாம்பு போன்றது, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடியவில்லை. தற்காலிகமாக நிறுத்தப்படவும் இல்லை' என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பீகார் மாநிலம் காரகட் நகரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிறைவு பெற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதில், சாலை , அனல்மின் நிலைய கட்டுமான பணிகளும் அடக்கம்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், நமது சகோதரிகள் திருமணமானப்பின் நெற்றி வடுகில் வைக்கும் குங்குமம் 'சிந்தூர்' வலிமையை பாகிஸ்தான் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் கண்டுள்ளது. பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்தனர். ஆனால், அவர்களை காலடியில் விழ வைத்தோம்.
பாகிஸ்தான் விமானப்படைத்தளங்கள், ராணுவ கட்டமைப்புகளை நாம் அழித்தோம். இது புதிய இந்தியா. இதன் சக்தி அனைவரும் காணும்படி உள்ளது. பயங்கரவாதம் பாம்பு போன்றது. பயங்கரவாதம் அதன் பொந்தில் இருந்து மீண்டும் தலைதூக்க நினைத்தால் அது தோண்டி எடுக்கப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படும். ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவிடம் உள்ள அம்புக்கூடையில் இருந்து வந்த ஒரே ஒரு அம்புதான். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடியவில்லை. தற்காலிகமாக நிறுத்தப்படவும் இல்லை' என்றார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


