Idhayam Matrimony

பஹல்காம் தாக்குலில் பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் மோடி

வெள்ளிக்கிழமை, 30 மே 2025      இந்தியா
Modi 2024-12-04

Source: provided

சகேரி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான சுபம் திவேதியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி  சந்தித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம், சகேரி விமான நிலையத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இது மிகவும் உணர்ச்சிபூர்வமான சந்திப்பாக இருந்தது என்று சுபமின் உறவினர் சௌரப் திவேதி தெரிவித்தார். மோடியைச் சந்தித்தபோது அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அழத் தொடங்கினர் என்று அவர் மேலும் கூறினார்.

அண்மையில் திருமணம் செய்துகொண்ட சுபம் திவேதி விடுமுறையையொட்டி பஹல்காம் சென்றபோது பயங்கரவாதத் தாக்குதலில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப். 22 ஆம் தேதி நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் கடற்படை அதிகாரி வினய் நர்வால் உள்பட 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதைத்தொடா்ந்து, இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தானும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. பின்னா் அமெரிக்கா தலையீட்டின்பேரில் கடந்த வாரம் மே 10 முதல் இருநாடுகளும் சண்டையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து