Idhayam Matrimony

மடத்தின் தலைவரை சீருடையில் ராணுவ தலைமைத் தளபதி சந்தித்ததால் சர்ச்சை

வெள்ளிக்கிழமை, 30 மே 2025      இந்தியா
ubendra

Source: provided

போபால் : மத்தியப் பிரதேச மாநிலம் சித்ரகூட்டில் ஆன்மிகத் தலைவர் ராமபத்ராச்சாரியாரை, ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி, ராணுவ சீருடையில் சென்று பார்த்து ஆசி பெற்றிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

இது பற்றி ராமபத்ராசார்யா கூறுகையில், இந்திய ராணுவத் தலைமை தளபதி என்னிடம் ஆசி பெற வந்தார். அவர் ராம மந்திரத்தை என்னிடமிருந்து தீட்சையாகப் பெற்றுக்கொண்டார். அந்த மந்திரமானது, ஹனுமன், சீதா தேவியிடமிருந்து பெற்று இலங்கையை வென்ற அதே மந்திரம்," என்று அவர்  கூறியிருக்கிறார்.

தொடர்ந்து, குருதட்சிணை குறித்து பேசிய அவர், இதுவரை எந்த குருவும் கேட்காத 'தட்சிணை'யை நான் கேட்பேன் என்று அவரிடம் சொன்னேன். 'எனக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வேண்டும், இதுதான் எனக்கு தட்சிணை என்றேன். அவர் என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் பதிலளித்தார் என ராமபத்ராசார்யா தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 அன்று பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து அடுத்த ஓரிரு வாரங்களில் ராணுவத் தலைமைத் தளபதியின் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து