எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நாகர்கோவில், : குமரி மாவட்டம் முழுவதும் வீசிய சூறை காற்றிற்கு 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளது.
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடற்கரை கிராமங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று மழை பெய்து கொண்டே இருந்தது. சூறைக்காற்றும் வீசியது. சூறை காற்றிற்கு கடற்கரை கிராமங்களில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. நாகர்கோவில் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்கம்பங்கள் சேதமடைந்தது. மீனாட்சிபுரம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதலே மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இறச்சகுளம், நாவல்காடு, ஆசாரிப்பள்ளம், ஈத்தாமொழி பகுதிகளிலும் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததில் மின்வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கியது. நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சரிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர்.
சாமிதோப்பு பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் ஒடிந்து விழுந்தன. ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் வீசிய சூறை காற்றிற்கு 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


