Idhayam Matrimony

ராமதாஸ் - அன்புமணி சந்தித்து கொள்ள முயற்சி எடுக்கிறேன்: பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பேட்டி

சனிக்கிழமை, 31 மே 2025      தமிழகம்
GK-Mani-2025-05-31

தைலாபுரம், ராமதாஸ்- அன்புமணி இருவரும் சந்தித்துக் கொள்ள வேண்டும், என்று முயற்சி எடுக்கிறேன் என்று பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி நேற்று (மே 31) தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அது பெரிய செய்தி ஆகிவிட்டது. அதன் தொடர் நிகழ்வுகள் மனதை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது. என்னைப் பொறுத்தவரை உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பா.ம.க. கட்சியினரும் அதைத்தான் விரும்புகின்றனர். ராமதாஸ்- அன்புமணி இருவரும் சந்தித்துக் கொள்ள வேண்டும், என்று முயற்சி எடுக்கிறேன்.  

எங்களது கட்சியைச் சேர்ந்தவர்களே கூட ராமதாஸ் - அன்புமணி இடையிலான விரிசலுக்கு நான் தான் காரணம் என்ற செய்தியை பதிவிடுகிறார்கள். இதை எப்படி என்னால் தாங்கிக்கொள்ள முடியும்.  நான் இரண்டு முடிவு எடுத்துள்ளேன். உங்களுக்கும், என்னுடைய குடும்பத்துக்கும், இந்த நாட்டுக்கும் தெரியாமல், எங்காவது போய்விட வேண்டும். யார் கண்ணிலும் படாமல் ஓடிப்போய்விட வேண்டும். அப்படி இல்லை என்றால் நான் உயிரோடு இருக்கக்கூடாது. இந்த இரண்டுதான் என்னுடைய முடிவு என்ற நிலையில் நான் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து