Idhayam Matrimony

நைஜீரியாவில் வெள்ளம்: பலி 151 ஆனது

சனிக்கிழமை, 31 மே 2025      உலகம்
Nigeria-2025-05-31

Source: provided

மோக்வா : மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மோக்வா நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் பலியாவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.

நைஜர் மாகாணத்திலுள்ள முக்கிய சந்தை நகரமான மோக்வாவில், பெய்த பருவமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில், 88 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேற்றுமுன்தினம் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளதாக, உள்ளூர் அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர்.

இத்துடன், அப்பகுதியில் வசித்த 3,000-க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில், தற்போது மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம்  பெய்த கனமழையால் 3 குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான வீடுகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து