Idhayam Matrimony

மன்னிப்பு கேட்க கமல் மறுப்பு: கர்நாடகாவில் தக்லைப் வெளியீடு ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 3 ஜூன் 2025      இந்தியா
Kamal 2023-09-19

Source: provided

பெங்களூரு: தக்லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதை ஒத்தி வைப்பதாக கமல் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகி உள்ள, தக் லைப் திரைப்படம், வரும் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சென்னையில் நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், 'தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்' என்றார்.

இதற்கு கர்நாடகா முழுதும் எதிர்ப்பு கிளம்பியது. 'கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கன்னட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், நடிகர் கமல், 'மன்னிப்பு கேட்க முடியாது' என கூறிவிட்டார். கர்நாடகாவில் கமல் படங்களுக்கு தடை விதிக்க கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தீர்மானித்து உள்ளது.

இந்நிலையில், கமலின், தக் லைப் திரைப்படத்தை வெளியிடுவதில் எந்த இடையூறும் இல்லாத வகையில், மாநில அரசுக்கும், போலீஸ் டி.ஜி.பி.,க்கும் உத்தரவிட வேண்டும் என, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது: கன்னடம் தமிழில் இருந்து வந்ததற்கான ஆதாரம் இருக்கிறதா? எதன் அடிப்படையில் தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்று பேசினீர்கள்? கமல் மன்னிப்பு கேட்டு இருந்தால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்து இருக்கும். கமல் ஏன் மன்னிப்பு கேட்க கூடாது. இவ்வாறு ஐகோர்ட் நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கு நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடகா பிலிம் சேம்பருக்கு கமல் அளித்த கடிதம் குறித்து தெரிவிக்கப்பட்டது. நீதிபதி நாகபிரசன்னா,  மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ? கமல் கன்னட மொழியை மதிக்கிறார் என்பதை ஏற்கிறோம். ஆனால், அவர் அளித்த கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லையே; மன்னிப்பு கேட்க சொன்னால் ஏன் சுற்றிவளைத்துப் பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து கமல் தரப்பு வழக்கறிஞர், தவறு செய்தால் தான் மன்னிப்பு கேட்க முடியும். தவறாக புரிந்து கொண்டால் எப்படி மன்னிப்பு கேட்பது படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்கிறோம் எனக்கூறினார்.  இதனையடுத்து வழக்கை ஜூன் 10ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து