எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவில்பட்டி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் ஏ.டி.மரிய கிளாட் அமர்வு, மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைப்பது, மரம் வளர்ப்பது உள்ளிட்ட வசதிகளை முறையாக செய்யும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூன் 18-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது, என உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று காலை சுமார் 9 மணி முதல் தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடிக்கு வந்த லாரிகள், நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு உள்ளதால் சுங்க கட்டணம் செலுத்த மாட்டோம் என கூறினர்.
ஆனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களுக்கு உத்தரவு நகல் கிடைக்கப் பெறவில்லை. உத்தரவு நகல் கிடைத்த பின்னர்தான் அதனை பின்பற்ற முடியும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை ஏற்காத லாரி உரிமையாளர்கள் நேற்று காலை தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரிகள் அனைத்தையும் சுங்கச்சாவடி கவுன்ட்டர்களில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மற்ற வாகனங்கள் சுங்கச்சாவடியில் அவசர வழியான வி.ஐ.பி. வழியில் செல்னறன. காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் 1 மணியை கடந்தும் நீடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


