எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி: பாகிஸ்தானுக்கு ரூ.6,700 கோடி ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் நீண்ட காலமாகவே தொடர்ந்து நிதி உதவி செய்து பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது. பாகிஸ்தானின் இந்த செயலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இந்நிலையில் ஆசிய வளர்ச்சி வங்கி, பாகிஸ்தானை மேம்படுத்துவதற்கு ரூ.6,700 கோடி கடன் உதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மாதம் தான் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்திடம் பாகிஸ்தான் கோரி இருந்தது. அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. அதை தொடர்ந்து ரூ.8,500 கோடி கடன் உதவி அளிக்க ஐ.எம்.எப்., ஒப்புதல் அளித்தது. இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனங்களை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து தற்போது ஆசிய வளர்ச்சி வங்கி, ரூ.6,700 கோடி கடன் நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள சர்வதேச நிதியத்திடம் அந்நாடு கோரிக்கை விடுத்தது. இதற்கு இந்தியா கடும் ஆட்சேபத்தை பதிவு செய்தது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 8,500 கோடி ரூபாய் கடன் உதவி அளிக்க சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்தது. இவ்வாறு வாங்கும் கடன் நிதிகள் அனைத்தும் பயங்கரவாதத்திற்கு தான் பாகிஸ்தான் பயன்படுத்தும். முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களைச் செயல்படுத்த பாகிஸ்தான் பலமுறை தவறிவிட்டது என்ற அடிப்படையில், இதற்கு இந்தியா கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


