எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம், தைலாபுரம் இல்லத்தில் தந்தை ராமதாஸை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.
பா.ம.க.வில் கடந்த சில நாட்களாகவே அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவிவருகிறது. அதிகார மோதல், தந்தை - மகன் உறவில் விரிசல் என்ற இந்த மோதல் போக்கு பா.ம.க. மூத்த நிர்வாகிகள் தொட்டு கடைநிலை தொண்டர்கள் வரை அனைவர் மத்தியிலும் ஆதங்கத்தை, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நிலையில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே சமாதானம் ஏற்பட வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 5) காலை அன்புமணி ராமதாஸ், தைலாபுரம் இல்லத்தில் தந்தை ராமதாஸை சந்தித்தார். இது சமரசப் பேச்சுவார்த்தை என்றும் கூறப்படுகிறது. ஆனால் சுமார் 45 நிமிடங்கள் நடந்த அந்த சந்திப்புக்குப் பின்னர் அன்புமணி காரில் புறப்பட்டுச் சென்றார். அவர் செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சந்திப்பை முடித்ததுமே அன்புமணி காரில் புறப்பட்டுச் சென்று விட்டார்.
இந்த சந்திப்பின்போது ராமதாஸ் - அன்புமணிக்கு இடையே சமரசம் ஏற்பட்டிருப்பதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அன்புமணியைத் தொடர்ந்து தற்போது ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் சந்தித்து வருகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியாகவே ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸ் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பா.ம.க.வில் ராமதாஸ் - அன்புமணி இடையே சமாதானம் ஏற்படுத்தும் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


